அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகளின் இறுதிசடங்குகள் இன்று (21.07.2019) 02.30 மணியளவில் அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன.
18.07.2019 அன்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பாலம் ஒன்றினை கடந்து செல்ல முற்பட்ட வேளையில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இம்மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனவும், உயிரிழந்தவர்களான மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கிதா என்பவர்களாவர்.
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/a3-2.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/a4-3.jpg)