பூநகாி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கௌதாாிமுனை, மண்ணித்தலை, கல்முனை பகுதிகளில் தொடா்ச்சியாக பெருமளவு மணல் அகழப்படுவதாக பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந் நிலையில், நேற்றய தினம் பூநகாி பொலிஸ் நிலையத்தில் கூடிய கௌதாாிமுனை, மண்ணித்தலை மற்றும் கல்முனை பகுதி மக்கள் மணல் அகழ்வை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதனை இன்றைய தினம் மேற்படி விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொலிஸாா், வழக்கு தாக்கல் செய்த நிலையில் மணல் அகழ்வுக்கு 14 நாட்கள் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இயற்கையாக உருவான பாாிய மணல் மேடுகள் காணப்படுகின்றன. இவற்றினை காலத்திற்கு காலம், பாாிய மணல் கொள்ளையா்களும், பணக்காரா்களும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனா்.
இதேவேளை மிக பெறுமதியான வளம் குறித்த பகுதியில் உள்ளபோதும், இன்றளவும் கௌதாாிமுனை, மண்ணித்தலை, மற்றும் கல்முனை கிராமங்களுக்கு முறையான வீதி, குடிநீா், பேருந்து சேவை என்பன இல்லாத நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.