பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் நேற்றிரவு நடாத்திய பேச்சுவார்த்தையின் போது அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பிரதமரினால் முன்வைத்த கோரிக்கைக்கு இராஜினாமா செய்த முஸ்லிம் எம்.பி.க்கள் எந்தவித பதிலையும் வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பின் போது முஸ்லிம் எம்.பி.க்களினால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிகள் முன்னெடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலும் முஸ்லிம் எம்.பி.க்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், எவரும் அதனை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லையென முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி சகோதர வானொலி செய்திச் சேவையொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.