பௌத்த பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட கன்னியாவில் தமிழரின் உரிமையை நிலைநாட்ட வழக்கினை தாக்கல் செய்த திருமலையின் இளம் சட்டத்தரணி சகோதரி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களுக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம்யுள்ளது.
எமது தமிழ் சமுகத்தில் அதிய உயர் பதவியில் இருப்பவர் தம்மால் சமுகத்திற்கு செய்ய வேண்டியதை செய்யாமல் எதுக்கு எடுத்தாலும் அரசியல்வாதிகளை குற்றம்சாட்டி தப்பித்து போவது வழமை ஆனால் இவர்களை போன்றோரிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
நாம் கற்ற கல்வி எமது குடும்பத்தினருக்கு மாத்திரம் பெருமை தேடி தருவதை விட சமுகத்திற்கும் உதவ வேண்டும் என்பதை யாவரும் உணர வேண்டும்.
குறித்த வழக்கினை இவருடன் திரு .சுமந்திரன் சில சட்டப்பாதுகாப்பையும் பெற்று தந்துள்ளார்கள் இருவருக்கும் நன்றிகள்.
- விகாரை கட்டுவதற்கான தடை
- பற்றுச்சீட்டு விற்பதற்கான தடை
- இந்து பக்தர்கள் சமய கடமைகள் செய்வதை எவரும் தடுக்க கூடாது என்னும் கட்டளை
- ஆலய நிர்வாகம் கோவிலை நிர்வாகவும் செய்வதை யாரும் தடுக்க கூடாது எனும் கட்டளை