Loading...
“ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் தெரிவு தொடர்பில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கின்றது.”
இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைவது உறுதி.”
Loading...
ஐக்கிய தேசியக் கட்சியினர் வீட்டுக்குப் போகும் வழியைத்தான் பார்க்க வேண்டும். இந்த நாட்டை அவர்கள் நாசமாக்கியது போதும்.
நாட்டு மக்கள் அனைவரையும் ரணில் அரசு ஏழைகளாக்கிவிட்டது. இந்த அரசை இனிமேலும் மக்கள் நம்பமாட்டார்கள். விரைவில் மீண்டும் ராஜபக்ச ஆட்சி மலரும். நாட்டு மக்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கின்றன” – என்றார்.
Loading...