Loading...
ரி56 ரக துப்பாக்கி , ரவைகள் மற்றும் வாள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், அத்திப்பட்டி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இச்சந்தேகநபர்கள் நேற்று (22) பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
அவர்களிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 16 ரவைகள், வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரை சேர்ந்த 24, 25, 30 வயதுடைய மூவரே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
Loading...