இந்து மதத்தின் பிறப்பிடம் இந்தியா.எனவே இலங்கையில் இந்துக்கள் மீது மேற்கொண்ணப்படும் அநீதிகள் மற்றும் இந்துக்களை அழிவில் இருந்து பாதுகாக்க இந்தியா உடன் தலையிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது ,
தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 36 வருடங்கள். அந்த வன்முறை காரணமாகவே உள்நாட்டுப் போர் கூர்மையடைந்தது.
கறுப்பு ஜூலையில் ஜெகன் , தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன் தமிழீழத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னபடியால் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டன. தங்கத்துரையையும் அப்படியே செய்தனர். அந்த அயோக்கியத்தனத்துக்கு இன்று வரை நீதி இல்லை. இன்றும் தமிழர்கள் நிம்மதியில்லாமல் உள்ளனர்.
இராவணனால் தோண்டப்பட்ட கன்னியாவில் அத்துமீறி குடியேற்றம் நடக்கிறது .இந்துக்கள் வாழ முடியாத ஒரு நிலை உள்ளது அந்திமக் கிரியை கூட செய்ய முடியாத ஒரு நிலை அங்குள்ளது. நீதிமன்றம் இன்று ஒரு தீர்ப்பை வழங்கினாலும் அதற்கு சிங்கள காடையர்கள் ஒத்துழைப்பார்களா என்பதை காலம் தான் சொல்லும்.
உண்மையான புத்த பகவானின் வழியை பின்பற்றினால் ஏன் அடுத்த மதத்தின் உரிமைகளை பறிக்கிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன். இங்கு நீதி இல்லை. நாடு அதளபாதாளத்துக்கு செல்கிறது.இந்து மதத்தின் பிறப்பிடம் இந்தியா. எனவே இந்தியா இதில் தலையிட வேண்டும்.