Loading...
பௌத்த மக்கள் இல்லாத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
Loading...
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்நாட்டில் ஜனாதிபதி முதற்கொண்டு பௌத்த தேரர்கள்வரை இனவாதத்துடன்தான் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
உண்மையான மதகுமார்களாக இருந்தால் ஏன் ஏனைய மதத்தவர்களின் வழிப்பாட்டு ஸ்தலங்களை அபகரித்து, ஏனைய இனத்தவர்களின் இடங்களை ஆக்கிரமிக்கின்றீர்களென்றும் அவர் பௌத்த மதகுருமார்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
Loading...