இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்கோஹ்லி தற்போது அணித் தலைவர் பதவியில் உற்சாகமாக இருந்தாலும் மூன்றாண்டுகளுக்கு பிறகு தான் இதன் சுமைக் குறித்து அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிகெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது டெஸ் போட்டியில் அபாரமாக 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு இன்னிங்சிலும், அணித் தலைவர் விராட்கோஹ்லி மிகச் சிறந்த முறையில் (167,81 ஓட்டங்கள்) தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
மேலும், இந்திய சுழல் பந்து பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அஸ்வின் தங்களது ஆக்ரோசமான பந்து வீச்சினை வெளிபடுத்தி அணியை வெற்றியடைய செய்தனர்.
அணித் தலைவர் பதவி குறித்து, கோஹ்லி கூறியதாவது, அணித் தலைவர் பொறுப்பில் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால், 5 துடுப்பாட்டக்காரர்களுடன் களமிறங்குவது தான் சவாலாக இருக்கிறது.
மேலும், எனக்கான பொறுப்பு அதிகமாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு பின் தான் அணித் தலைவர் பதவி சுமையாக உள்ளதா என கணிக்க முடியும். நமது திட்டங்களை சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்தினாலே போதுமானது என தெரிவித்துள்ளார்.