மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியிலிருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளோடு சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 12 பொதிகளில் 385 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
மன்னார் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகளை மீட்டுள்ளனர்.
அதோடு, அதோடு கதுசெய்யப்பட்ட நபர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொதிகளை மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொதிகளை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டார்.
மேலும் விசாரனைகளின் பின்னர் குறித்த பொதிகள் யாழ் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.