இந்த அறிவிப்பின் காரணமாக முழு இந்தியாவுமே ஸ்தம்பித்து போயுள்ளது. டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் பழைய நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை மாற்றிக்கொள்ளும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளை மக்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம், பத்தேபுரியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா வங்கி கிளையில் 500, 1000 பணத்தை மாற்றுவதற்காக மக்கள், கூட்டமாக வங்கிக்குள் நுழைய முற்பட்டனர்.
அவர்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் தடியால் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தாக்குதலுக்குள்ளான மக்கள் கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் ஜெட்லியும், வங்கி மேலாளர்களும் தொலைக்காட்சிகளில் வங்கிகளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கின்றனர்.
ஆனால் அவர்களும், அவர்களை சுற்றியிருப்பவர்களும் வங்கி பக்கம் வருவதில்லை. நாங்கள் சேமித்த பணத்தை எடுக்கவும், கையில் வைத்திருக்கும் பணத்தை மாற்றவும் கால் வலிக்க காத்து நிற்கிறோம்.
வங்கியினரோ, இன்று பணம் தீர்ந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்புவது நாங்கள்தான். ஆகையால்தான் வங்கி திறந்தவுடன் இரண்டு நாட்களாக பல மணி நேரம் காத்திருந்தும் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
இன்றாவது பணத்தை பெற்றுவிட வேண்டும் என்று ஓடினோம். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிறது. எங்களை தாக்கிய பொலிஸார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களுடன் மோடி வந்து க்யூவில் நிற்க வேண்டாம். எங்களை தாக்கிய இந்த வீடியோவையாவது அவர் பார்த்திருப்பாரா என்று கேள்வி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, உத்திரப்பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சியினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநில அரசையும் விமர்சித்தனர்.