இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் போட்டியை காண இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை புரிந்துள்ளார்.
மேலும் இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றதுடன் அணியிலிருந்து மலிங்கா விடைபெறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடவுள்ளதாக மலிங்கா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்று ஆடுவேன் என்றும் மலிங்கா தெரிவித்துள்ளார்.