பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டிற்காக நாட்டாமை டாஸ்க் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்தே பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக மீரா மிதூன், தர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல டாஸ்கின் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக செய்ததாக முகின் தேர்வானார்.
இதைத் தொடர்ந்து, டாஸ்கில் சரியாக பங்கெடுக்காதவர்களாக அபிராமி மற்றும் லோஸ்லியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால், டாஸ்கை சரியாக செய்யாத காரணத்தினால் அபிராமியும், லோஸ்லியாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சிறைக் கைதிகளுக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது எனவும், சிறை கைதிகளுக்கு உணவு பிக்பாஸிடம் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.