பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த நாட்டாமை டாஸ்க் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அநாகரிகமான முறையில் சேரனிடம் கோபத்தில் வார்த்தைகளை கொட்டி தீர்த்தார் மீரா.
இந்த பிரச்சனையால் மீரா மிதுன் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்களில் அதிகளவில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தர்களான சாக்ஷி மற்றும் மீரா பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதில், தற்போது மீரா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது சமூக வலைதளங்களில் வைரலாகும் கருத்தாக இருக்கிறது.
இதற்கிடையில், நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபரின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், சேரனுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு முன், ஷாக்சியை தான் மக்கள் வெளியேற்ற நினைத்தனர், ஆனால் சேரனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது மீரா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மீராவால் ஷாக்சி காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை.