டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்டது. இது உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது மற்றும் ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.
டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
இந்த மூன்றூ வகை பழங்களை வெட்டி உட்புறத்தை பார்த்தால், கிவி பழத்தை போல் சதையில் கறுப்பு புள்ளிகளாக விதைகள் இருக்கும். இந்த விதைகள் செரிமானத்திற்கு நல்லது.
இந்த பழத்தின் இலைகளை ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் பயன்படுத்துவர். இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம்.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும், புற்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும் இந்த பழத்தை உட்கொண்டால் நல்ல பலனை கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.