வடக்கில் பணப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சவப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பது போலவே தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்கின்றனர் என ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ஸ்ரான்லி வீதியிலுள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது..
வடக்கில் சவப்பெட்டி கடை அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்.
இப்போது பதிக்கப்படவர்களுக்கு வாதாடி வருவதாக கூறி திரிகின்றார் அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக் கொண்டு வரப்படும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவருடன் ஓர் தொலைக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்டேன்.
அவர் என்மீதும் எனது கட்சியின் மீதும் பல கொலை, கொள்ளை கடத்தல் குற்றச் சாட்டுக்களை சுமத்தினார்.
அப்போது நான் அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுங்கள் நாம் அதனை வரவேற்போம் என்றேன்.
எம்மில் யாரவது தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். சில குற்றச் சாட்டில் ஈடுபட்ட எனது கட்சியை சேர்ந்த சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். அவர்களில் நீதிமன்ற நடவடிக்கையிலும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எங்கள் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்த முன்னணியை சேர்ந்த அந்த சட்டத்தரணி ஒரு காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்.
அவ்வாறு ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக்கொண்டு வரப்படும்.
இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட சட்டத்தரணி பாதிக்கப்பட்ட ஐயர் குடும்பம் ஒன்றுக்காக தாம் இலவசமாக வாதாடியதாக கூறினார்.
ஆனால் அவர் 5 இலட்சம் வாங்கி வாதாடியுள்ளார். இவ்வாறு இந்த சவப்பெட்டி கடை கட்சிக் காரரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சட்டத்தரணிகள் ஏராளமான பணத்தினை கொள்ளைப் பணமாக கறந்து உழைத்து வருகின்றனர்.
பின்னர் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி வருகின்றனர்.