நாட்டை கட்டியெழும்பும் முயற்சிகளைத் தடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார்.
மக்களுக்காக, தற்போதைய அரசாங்கம் கணிசமான பெறுபேறுகளையும், வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எம்பிலியப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொதுமக்களுக்கு உறுதியளித்த பல வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பல வீடமைப்புத் திட்டங்களையும், வீதி வலையமைப்பு கட்டமைப்புக்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.