முஸ்லிம் குவாஷி நீதிமன்றங்களால் முஸ்லிம் பெண்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக அண்மையில் பல முஸ்லிம் பெண்கள் பகிரங்கமாக தமது அனுபவங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேற்றும் (29) இரண்டு முஸ்லிம் பெண்கள் வெளிப்படுத்தினர். கொழும்பிலுள்ள சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு நேரில் சென்ற இரண்டு முஸ்லிம் பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை பகிரங்கப்படுத்தினர்.
முஸ்லிம் திருமண விவகாரத்தை கையாளும் முஸ்லிம் குவாஷி நீதிமன்றம் மற்றும் உள்ளூர் மசூதி ஆகியவற்றால் தான் அநியாயமாக நடத்தப்படுவதாக பண்டராகாம, அதுலுகமவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.
இதையடுத்துஇ மாளிகாவத்தை மற்றும் ஊவா பரணகம போவெல பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விவாகரத்து நடவடிக்கைகளில் குவாஷி நீதிமன்றத்தால் நியாயமற்ற முறையில் தமமுடன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.
கண்டியை சேர்ந்த ஒருவர், தனது 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த அதே நபருடன் திருமணம் செய்து வைத்ததாக நீதிமன்றம் மீது குற்றம்சாட்டினார்.
இந்தப் பின்னணியில்இ கொழும்பின் அளுக்கடவைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் இதேபோன்ற தமது அனுபவங்களை நேற்று வெளிப்படுத்தினர்.
குவாஷி நீதிமன்றங்கள் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்கின்றன என்று அவர்கள் கூறினர்