மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை (batticaloa campus) எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க மாட்டோம் என முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவசரகால சட்டத்தின் கீழ் குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று கொள்ளுபிட்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மட்டக்களப்பு பல்கலைகழகம் மீதும் ஹிஸ்புல்லாஹ் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல்கலைகழகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஹிஸ்புல்லா இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.