பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் மீரா மிதுன் வெளியேறினார். இதற்கு முக்கிய காரணமே அவர் சேரனை தவறாக விமர்ச்சித்தது தான். ஆரம்பத்தில் கொஞ்சம் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அதன் பின் மக்களின் ஆதரவை பெற்றார்.
ஆனால், கடந்த வார டாஸ்கின் போது சேரன் என்னை தவறாக இடுப்பை பிடித்து தள்ளினார். என்று கூறி பெரிய விவாதமாக மாற்றினார். அதிலும் குறும்படம் போட்டுக்காண்பித்தும் தனது தவறை மீரா உணராமல் கடவுளுக்கு தெரியும் என்று வசனத்தை எல்லாம் பேசினார்.
இந்நிலையில் வெளியே வந்த மீரா கூறியதாவது, இந்த பேட்டியின் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெள்ளவே கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று மீராவிடம் கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக சாக்க்ஷி அபிராமி ஷெரின் தான். கண்டிப்பாக அனைவருமே மோசமானவர்கள் ஒவ்வொரு வாரமும் இவர்களால் நான் பல பிரச்சினைகளை சந்தித்தேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி வந்துள்ளேன்.
ஒரு பெண், ஆண் குறித்து ஏதாவது சொன்னால் பெண்கள் தான் அதற்கு ஆதரவாக நிற்க வேண்டும் ஆனால் சேரன் விஷயத்தில் அவர்கள் சேரனுக்கு தான் ஆதரவாக இருந்தனர். அவர்கள் ஒரு பெண்ணாக என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து அந்த பிரச்சினையை பார்க்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால் இவர்களை விட ஆண்கள் தான் என்னை அதிகம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்து வந்தனர் என்று கூறியுள்ளார்.