ரஷ்யா நாட்டில் மாஸ்கோவில் அழகு பதுமையாக வலம் வந்த அழகியல் மருத்துவரை கத்தியால் குத்தி கொலை செய்து சூட்கேஸில் நிர்வாணமாக மடக்கி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அழகியல் மருத்துவரின் பெயர் ஏக்தேரினா. இவர் மாஸ்கோவில் பிரபலமான அழகியல் மருத்துவர் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் ஆவார்.
மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த அழகிப்போட்டியில் பங்கேற்றி பெற்ற இவர், தனது கவர்ச்சிப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பெற்றோர்களுடன் இல்லாமல் மாஸ்கோவில் தனியாக பிளாட்டில் தங்கியுள்ள இவர், தினமும் அவர்களிடம் போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இரண்டு நாட்களாக மகளிடமிருந்து போன் வராமலும், மகளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர் பதறியடித்து பொலிசாருடன் ஏக்தேரினா வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது ரத்தகறை படித்த சூட்கேஸில் பல கத்திக்குத்து காயங்களுடன் நிர்வாண கோலத்தில் மகள் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.
பொலிசாரின் விசாரணையில், ஏக்தேரினா கடந்த சில வருடங்களுக்கு முன்பு 32 வயது நபரை காதலித்து வந்தார். அதன் பின்பு கடந்த சில மாதங்களாக 52 வயதான நபருடன் காதல்வயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காதல் பிரச்சினையால் இந்த கொலை நடந்ததுள்ளதா? அல்லது தொழில் போட்டியினால் இந்த கொலை நடந்துள்ளதா? என பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அழகியல் மருத்துவராக இருந்த இவர் தோல்நோய்க்கு மட்டுமின்றி பாலியல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.