பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆர்மிகள் துவங்குவது சகஜமாகிவிட்டது. முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா போல இந்த சீசனில் லொஸ்லியாவிற்கு ஆர்மிகள் தொடங்கியது.
இருப்பினும், இந்த வருடம் கொஞ்சம் ஓவர் தான். அதாவது நிகழ்ச்சி தொடங்கிய அன்றே ஆர்மி தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது லொஸ்லியா செய்வதெல்லாம் அவரது ரசிகர்களுக்கே பிடிக்காத வன்னம் தான் இருக்கிறது.
ஆம், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் சதீஷ், லொஸ்லியா குறித்து ட்வீட் செய்துள்ளார்.
Losliya evil mode on #bigbosstamil3 nice naradar job between kavin n sakshi . Very mystery
— Sathish krishnan (@dancersatz) July 30, 2019
அதில், இப்போதுதான் லொஸ்லியா தனது முகத்தை காண்பிக்கிறார். சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார். மிகவும் மர்மமாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். அதே போல ஜெயில் ட்வீட் போதும் லொஸ்லியா ஓவர் ஆக்டிங் செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சதீஷ் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.