பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை தேர்வு செய்துள்ளார்.
அக்தர் ட்விட்டரில் ஒரு கேள்வி-பதில் அமர்வை நடத்தி வந்தார், அதில் இந்திய வீரர் கோஹ்லி, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்து கேன் வில்லியம்சன் மற்றும் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் ஆகியோரிடையே உலகின் சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்த கேள்விக்கு தயக்கமின்றி கோஹ்லி என பதிலளித்தார் அக்தர்.
விராட் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் பட்டையை கிளப்பி வருபவர் என்பதால் அக்தரின் தேர்வு நியாயமானதாக கருதப்படுகிறது.
#AskShoaibAkhtar Kohli / Joe Root / Steve Smith / Kane Williamson / Babar Azam ….who’s best?!
— Om Lal Mehta (@omlalmehta) July 29, 2019
இந்திய கேப்டன் ஏற்கனவே 41 ஒருநாள் சர்வதேச சதங்களை அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களை அடித்த இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
236 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி 11286 ரன்களுடன், 59.40 சராசரியாக வைத்து இருக்கிறார், அதே நேரத்தில் அவரது டி20 போட்டி சராசரி 67 போட்டிகளில் 50.28 ஆக 2263 ரன்கள் அடித்துள்ளார்
விராட், பாரம்பரிய டெஸ்ட கிரிக்கெட் போட்டியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார், இதுவரை 77 போட்டிகளில் 53.76 சராசரியாக 6613 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் 25 சதம் அடித்துள்ள கோஹ்லி அவற்றில் 6 இரட்டை சதம் அடித்துள்ளார்.