களுத்துறை, அழுத்கம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து இளம் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் அறிமுகமானவர்கள் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வில் போதைப்பொருள் பாவித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆபத்தான போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 8 இளைஞர் மற்றும் யுவதிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதி சுற்றிவளைக்கும் போது அங்கு 30 பேர் போதையில் தள்ளாடிய நிலையில் இருந்ததாகவும், அவர்கள் 19 முதல் 25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளம் பெண்கள் அரைநிர்வாண கோலத்தில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான சமூக சீர்கேடுளை ஏற்படுத்தும் வகையிலான களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் அதிகளவான இளம் யுவதிகள் பங்கேற்பதாகவும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.
மேலும் இவ்வாறான செயற்பாட்டினை இளைஞர்கள் உடனடியாக தவிர்க்க வேண்டும் எனவும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.