மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
மீராவோடை மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை, வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிசுவை அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை ஒப்படைத்துள்ளார்.
இதேவேளை மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 4 நாட்கள் இருக்கலாம் எனவும் , அத்துடன் சிசு 2970 கிராம் எடையுள்ளதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.