2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது 8 கைதிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவு அதிகாரியான இமதுவகே இந்திக சம்பத் என்பரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிடியாணை பிறப்பக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் நிலையை கட்டுப்படுத்துவதற்கு குறித்த 8 கைதிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில்,
முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ , முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இமதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.