நிலவு பூமியுடன் இணைந்தே சுற்றி வருகின்றது, நீ இல்லாவிட்டால் நான் இல்லை என பூமியும் நிலவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்கள் என்பதே தொன்று தொட்டு நாம் நம்பி வரும் கூற்று.
என்றாலும் நிலவைப் பற்றிய மர்மங்கள் இப்போதும் இருக்கின்றன. தற்போது புதிதாக சொல்ல வருவது என்னவெனில் நிலவு இயற்கை இல்லை செயற்கை.
வேற்றுக்கிரகவாசிகள் பூமியை அவதானிக்க, இரகசிய தளமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டதே நிலவு, என வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் அதற்காக ஆதாரங்கள் சிலவற்றினையும் தெரிவித்துள்ளனர். அவையாவன
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட சில கூறுகள் நிலவிற்கு பொறுத்தம் இல்லாதவைகள். அங்குள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்காத மைய்க்கா, பிராஸ், யுரேனியம்236 அத்தோடு நெருப்பியம்237 போன்ற கூறுகள் உள்ளன.
இதில் யுரேனியம்236 என்பது கதிரியக்கம் மற்றும் அணுசக்தியின் பின்னர் பெறப்படும் ஒன்றாகும், அத்துடன் மேற்கூறப்பட்ட இரசாயன கூறுகள் இயற்கையாக உருவாகியவை இல்லை.
அடுத்து, பூமியில் காணப்படும் டைட்டானியம் மிகுதி பூமியை விட நிலவுப் பாறைகளில் பத்து மடங்கு அதிகமாக கலந்திருக்கின்றது. பூலோக வாசிகள், சூப்பர்சொனிக் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விண்கலம் போன்றன வற்றை அமைக்கவே பயன்படுத்துகின்றனர்.
ஆனாலும் நிலவுப் பாறைகளை ஆய்வு செய்தவர்கள் இவை எப்படி நிலவுப்பாறைகளில் வந்தன என்பதை கூற மறுக்கின்றனர்.
1969ஆம் ஆண்டு நவம்பர், நாசா சந்திரனில் ஒரு வெடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தி ஆய்வு செய்வதற்காக லூனர் மாடலை lunar module நிலவின் மேற் பகுதியில் மோதச் செய்தது.
அந்த மோதலின் பின்னர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு நிலவில் மணிச் சத்தம் போல் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. இயற்கையான பாறையில் அல்லது மேற்பரப்பில் மோதும் போது இப்படியான அதிர்வு ஏற்படுவது சாத்தியம் இல்லை.
மேலும், ஏனைய கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கூறுகள் திடமான மையப்பாகம் கொண்டவைகள், எனினும் நிலவில் திடமான மையப்பகுதி இல்லை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேபோன்று, நிலவின் உட்பகுதி வெற்று இடைவெளியாக, அல்லது மிகக் குறைவான தீவிர உள்ளமைப்பு ( very low intensity interior ) கொண்டதாக இருக்கின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதும் ஆச்சரியந்தான்.
மற்றும் சூரிய மண்டலத்தில் மிகத் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதை (சுற்றுவட்டப்பாதை) கொண்டது நிலவு மட்டும் தான். பூமியை விட சுமார் 800000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நிலவு என்கின்றனர் ஒரு சிலர். ஆனாலும் பூமியின் சிதறலே நிலவு என்கின்றனர் ஒரு சிலர், ஆனால் உண்மைகள் கூறப்படவில்லை.
சூரியக் குடும்பத்தின் எந்தவொரு பண்பும் நிவவோடு ஒத்துப் போகவும் இல்லை, அத்துடன் நிலவை பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
பூமி சுற்றும் போது அதற்கு ஏற்றாப்போல் துல்லியமாக செயற்படுகின்றது நிலவு. இத்தனை துல்லியம் இயற்கையாக சாத்தியம் இல்லை, அமெரிக்கா நிலவில் கால் வைத்ததும் பொய் என்றுதான் கூறப்படுகின்றது.
அதன்படி நிலவு தூசிகள் மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கட்டப்பட்டு, நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் அதிகளவான எதிர்ப்பு சக்தி மிக்க கூறுகளைக் கொண்டு சக்திமிக்க ஷெல் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆதாரங்களின் காரணமாக நிலவு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது, குறிப்பான பூமியை வேற்றுக்கிரக வாசிகள் நோட்டம் இடுவதற்காகவே கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.