ஓமானில் உள்ள இலங்கை தூதரகம், அந்நாட்டில் பணியாற்றும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக ‘தொலைபேசி அழைப்பு சேவை’ ஒன்றை அறிமுகம் செய்தது.
ஓமானில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தவும், அவர்களுக்கு சிறந்த சேவைகளை உறுதி செய்வதற்காகவும் ‘தொலைபேசி அழைப்பு சேவை’ ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது என ஓமானுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அமீரஜ்வத் இந்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் போது தெரிவித்தார்.
இந்த தொலைபேசி அழைப்பு சேவையானது கட்டணமில்லாத தொலைபேசி, வாட்ஸ்அப், இமோ மெசேஜிங் மற்றும் குறுஞ் செய்திகள் போன்ற பல்வேறு வகையான தொடர்பு முறைகளை உள்ளடக்கியுள்ளது என தூதுவர் அமீரஜ்வத் மேலும் விளக்கினார்.
ஓமானில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கு இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
ஓமானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு தூதரகம் பதிலளித்து அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும். இந்த நோக்கத்திற்காக, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான பிரத்தியேக அதிகாரிகள் தூதரகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேவையேற்படும் பட்சத்தில் தொடர்புகொள்வதற்காக, தூதுவர் அமீரஜ்வத் ஓமானில் வசிக்கும் அனைத்து இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தங்களை தூதரகத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஓமானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கும் தூதரகத்தில் தங்களை பதிவுசெய்வதற்கும் பின்வரும் பிரத்தியேக தகவல் தொடர்பு முறைகள் மூலம் மஸ்கட்டில் உள்ள தூதரகத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.