இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்ட மலேரியா நோய் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் 18 மலேரியா நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் தென் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டதாக பணியகத்தின் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
உகண்டாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹேமந்த ஹேரத் கூறினார்.
மலேரியா தொற்றுக்குள்ளானோர் உடனடியாக சிகிச்சைகளைப் பெற்றால் நோயை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும். வௌிநாடுகளிலிருந்து வருகை தருவோரால் மீண்டும் மலேரியா நோய்த்தொற்று ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.