கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனிருத் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும், அவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்ப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அனிருத் இந்த தகவலை தன்னுடைய டுவிட்டரில் மறுத்தார். தனக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இந்த நேரத்தில் திடீரென ஒரு முன்னணி நடிகை, அனிருத்தின் டுவீட்டரில் ‘ஏன் அந்த பொண்ணுகூட ரிலேசன்ஷிப் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டுள்ளார்.
அனிருத் தான் இசையமைத்த படத்தில் நடித்த ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும், இந்த விஷயம் அந்த முன்னணி நடிகையின் டுவீட்டால் வெட்ட வெளிச்சமானதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இதுவரை இதற்கு பதில் சொல்லாமல் மெளனம் காப்பது சந்தேகத்தை இன்னும் உறுதி செய்கிறது.