நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தற்கொலை தாக்குதலில் ஷங்கிரிலா ஹோட்டலில் காணாமல் சமையல் கலைஞரின் உடல் 4 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஷங்கிரிலா ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான விஹக தேஜாந்த என்ற இளைஞனின் சடலம் நேற்று கனேமுல்ல பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது, குறித்த இளைஞன் தற்கொலை தாக்குதல்தாரிக்கு அருகிலேயே நடமாடிய காட்சிகள் சிசிடீவியில் பதிவாகியிருந்தது.
எனினும் தாக்குதலின் பின்னர் குறித்த இளைஞனின் சடலம் கிடைக்கவில்லை ஆதலால், காணாமல் போனவர்கள் பட்டியலில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது.
எனினும் குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில் சிதைந்த சடலம் ஒன்றிற்கு டீ.என்.ஏ சோதனை நடத்தப்பட்ட போது, அந்த சடலம் குறித்த இளைஞனுடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சடலம் வீட்டிற்கு எடுத்துசெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.