Loading...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுள் 21 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 24 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்குகின்றனர்.
Loading...
மேலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 21 பேரும் இன்று காலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவு, பயங்கரவாத விசாரணை பிரிவு உள்ளிட்டவைகளுக்கு புதிதாக பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Loading...