நாம் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்பு வர உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம். ஆனால், நாகரீக வளர்ச்சி, பொது கழிவறை வடிவ மாற்றங்கள் உண்டான பிறகு, நின்று சிறுநீர் கழிப்பது தான் நாகரீகம். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அநாகரிகமான செயல் என்பது போல நகர மக்கள் பார்க்க ஆரம்பித்தனர் (என்னையும் உட்பட!)
ஆனால், இப்போது ஆய்வாளர்கள் ஆண்களும் நின்று சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுரைக்கின்றனர். இது ஏன்? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்று இனிக் காண்போம்…
ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைகிறது.
மேலும், நோய் நுண்மங்கள் தொற்று உண்டாகும் விகிதமும் குறையும்.
உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கும் நல்லது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையால், கழிவறை, கழிவுகள் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களது வேலையும் எளிதாகும் என கூறுகிறார்கள்.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடியும். நின்றுக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போது இது முடியாது!
குறைந்த சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் நல்லது. ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை உதவுவதால் இதை சரி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களுக்கு உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது. ஆனால், ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சரி.