சுவிட்சர்லாந்தின் , லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரம் சிறுமி தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.
சிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னரே தம்முடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும் , அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னரே ஆற்றில் இருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்ட நிலையில், முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.