மனோ கணேசன் கிழக்கிற்க்கு வந்து கல் நாட்டுவதும் அரசியல் கூத்து காட்டுவதும் கனேசமூர்த்தியின் வாரிசின் அரசியல் பிரவேசத்துக்காக என முகநுால் பக்கங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான் அவர்களின் சகாக்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்), முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோர் சிறைச்சாலையில் உள்ளனர் அவர்களை பார்க்க மனோ கனேசனிற்கு என்ன தேவை உள்ளது.
மேற் குறிப்பிட்ட குற்றவாளிகளே முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் ரவிந்திரநாத் படுகொலையுடனும் தொடர்பு பட்டுள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.
இப்படியானரை சந்திப்பதில் என்ன அரசியல் நோக்கம் உள்ளது.
அமைச்சரின் தேசிய ஒருமைப்பாட்டில் ஆயுதக் குழுக்கள் மற்றும் கொலைகாரர்களை இணைக்கும் பெறுப்பு பிரதமர் ரணிலால் மனோ கணேசனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதா
கிழக்கு மாகாணம் என்றால் பலரின் நினைப்பு இழிச்சவாயன் உள்ள இடம் எல்லோரும் அங்கு உள்ள மக்களை ஏமாற்றி விடலாம் என்பதே இன்றைய நிலை இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளும் விதிவிலக்கல்ல.
கருணாவால் தமிழ் தேசியம் சிதைக்கப் பட்ட போது தமிழ் தேசியத்திலிருந்து சிறிதளவும் விலகாமல் துரோகிகளிற்கு தக்க பாடம் கற்பித்து தமிழ் தேசியத்தின் வெற்றிக் கொடியை நாட்டியதும் இதே கிழக்கு மண் என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும்.
இதே மனோ கணேசன் தான் இன்று மகிந்தவிடம் சென்று கொள்ளை இல்லாமல் கறுப்புச் சட்டையுடன் கிழமைக்கு ஒரு வீதி நாடகம் போடும் வியாழேந்திரனை வளர்த்து விட்டவர்.
கிழக்கின் மூன்று மாகாணங்களிலும் தேசியக் கட்சிகளில் இருந்து இன்று வரை தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு கிழக்கு மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை ஆனால் வடக்கில் டக்ளஸ் – விஜயகலா வழியனுப்பி அழகு பார்க்கப் பட்டது.. படுகிறது…
இப்படியான கொள்கையில் உறுதியான கிழக்கு மண்ணை வந்தவர்கள் எல்லாம் ஆள நினைக்கும் நிலை மாற வேண்டும் என்பதுடன் கனேசமூர்த்தி தமிழ் சமூகத்தை காட்டி பிளைப்பு நடத்தும் ஒருவர் இப்படியானவர்கள் மற்றும் கொலைகாற கும்பல்களை வளர்க்க மனோ கணேசன் எத்தனிப்பது அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறது.