பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போது பெரும் எதிர்பார்ப்போடு தான் தொடங்கியது. ஆனால் ஒளிபரப்பான பின் கடும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது.
மூன்றாவது சீசனை எட்டிவிட்டாலும் எதிர்ப்புகளும் கடுமையாக உள்ளது. தற்போது தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்களின் கடும் கோபத்தில் ஆளாகியுள்ளது.
இதில் இந்த முறை போட்டியாளராக பங்கேற்றுள்ள ஸ்ரீமுகி அடிக்கடி வீட்டிலிருக்கும் சக ஹவுஸ் மேட்ஸிடம் மோதல்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஆனால் இந்நிகழ்ச்சியின் எடிட்டர்கள் ஸ்ரீமுகி செய்யும் விசயங்களை மக்களுக்கு காட்டாமல் காட்சிகளை நீக்கி அவருக்கு ஆதரவாக செயல்படும் அவரை தொடர்ந்து காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாடகர் ராகுல் உடன் அவர் போட்ட சண்டையையும் காட்டவில்லையாம். ஸ்ரீமுகி அமைதியாக இருக்கும் போதும் வேடிக்கையாக ஏதாவது செய்வதை மட்டுமே தொடர்ந்து காட்டி வருகிறார்களாம்.
இதே போல கடந்து சீசனில் மக்களால் வெளியேற்றப்பட்ட தேஜஸ்வினி என்பவரை மீண்டும் Wild Card மூலம் உள்ளே கொண்டு வந்ததும் தற்போது சந்தேகத்தை வலுக்க செய்துள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீமுகி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.