சுவிட்சர்லாந்து நாட்டில் ஏரியில் விழுந்து உயிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் இன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றது.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறு வயது சிறுமியே கடந்த 4ம் திகதி ஏரியில் வீழ்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன.
இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். குறிப்பாக, சிறுமியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் பலரும், கண்ணீர் விட்டு கதறியழுத நெகிழ்ச்சியான தருணமும் பதிவாயிருந்தது.
நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி கடந்த 4ம் திகதி தண்ணீரில் விழுந்து மூழ்கினார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சுழியோடிகள் ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியை மீட்டெடுத்து முதலுதவிகள் வழங்கினர். எனினும், சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.