2016 ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த திம்மக்கா என்ற 105 வயது பாட்டி இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
பெங்களூர் கூதூர் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா என்பவர் வசித்து வந்த கிராமத்தின் நெடுஞ்சாலை பொட்டல் காடாக இருந்துள்ளது.
பொட்டல் காடாக இருக்கும் இந்த பாதையில் மரங்கள் நட்டு, சோலைவனமாக மாற்றவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
கணவர் உதவியுடன் சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு அதை பிள்ளைகளை வளர்ப்பது போல, கஷ்டப்பட்டு வளர்த்தார்.
இன்று நான்கு கிலோ மீற்றர் தூரம் அவர் நட்ட மரம் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நிழல் தருகிறது.
பொட்டல் காடாக இருந்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது. 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்கள் இவர் நட்டுள்ளார்.
இவருடைய இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பிபிசி நாளிதழ் வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் திம்மக்காவின் பெயர் இடம்பெற்றுள்ளது.