1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 232 தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டடு இன்றுடன் ஆண்டுகள் 29 ஆகும்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலையிலும் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில் ஆகஸ்ட் 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரை இல்லை