இந்தியாவில் குடிபோதையில் நகைக்காக சகோதரியை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ் (36) என்பவர் வசித்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் தினமும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போதையில் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்த ரமணா அவரின் செயினை கழட்டி தரும் கேட்டுள்ளார்.
ஆனால் இதற்கு அவர் மறுத்த நிலையில் சீதாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்ற ரமணா பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினார்.
ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக தோன்றிய நிலையில்
பொலிஸார் ரமணாவிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சீதாலட்சுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
இதை தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.