அகமதாபாத்தில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
அகமதாபாத் நரோல் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ஒரு மாத காலமாக வேலைதேடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி, இரவு தூங்கிக் கொண்டிருந்த போது பலமுரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நரோல் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர் புர்சிங் தேவதா என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து நரோல் பொலிஸ் ஆய்வாளர் RA ஜாதவ் கூறியுள்ளதாவது, புர்சிங் தேவதா அதாவது வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கட்டுமான தொழிலாளி, இவர் குறித்த சிறுமியுடன் வேலைபார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், குறித்த சிறுமியும், புர்சிங் தேவதாவும் ராஜஸ்தானில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், புர்சிங் தேவதா மீது IPC 376 இன் கீழ் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மூத்த ஆய்வாளர் தெரிவித்தார்.