நடிகை ஸ்வேதா திவாரி தனது கணவர் மீது அதிரடியாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகை ஸ்வேதா திவாரி இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்.
இவர் அபிநவ் கோழி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இவருக்கும் இவரது கணவருக்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபிநவ் அடிக்கடி குடித்துவிட்டு வருவதாக தெரிகிறது.
குடித்துவிட்டு வருவதோடு, மகளையும் துன்புறுத்துவதாக கூறி ஸ்வேதா கண்டிவாலியில் உள்ள சம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்வேதா அளித்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், காவல் நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இருவரும் தாங்கள் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.