முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்த் வந்த நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்திருக்கும் நிலையில், அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை அவருடைய தாய் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் நளினியும் ஒருவர், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர், தற்போது லண்டனில் இருக்கும் தன் மகளின் திருமணத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பரோலில், பல நிபந்தனைகளுடன் வெளிவந்தார்.
தற்போது சிறையில் இருந்து வெளிவந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இவர் தற்போது எப்படி இருக்கிறார்? என்பதை அவருடைய தாய் பத்மாவதியிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் அவள் வந்தவுடன் ஆராத்தி எடுத்தேன், அப்போது அவள் கண்கலங்கிவிட்டாள். அதன் பின் அவளை கட்டிப்பிடித்து, உன்னை பிரிந்து இனி வாழும் காலம் எனக்கு வேண்டாம் என்று அவளை ஆசை தீர கட்டிப்பிடித்து அழுதேன்.
அப்போ அவள், அம்மா என்னுடைய உயிர் உங்க மடியில் தான் போகும் கவலைப்படாதீங்க என்று கூறினாள்.
பேத்தி திருமணம் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது என்ற போது, ஆடி மாதம் முடிந்தால் தான், கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தையே ஆரம்பிக்க முடியும்.
இலங்கையில நளினியின் மாமனார் புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருக்கிறார். அதனால், ஶ்ரீகரனின் அம்மா, உடன்பிறந்தவர்கள் எல்லோரும் அவர் கூடவே இருக்கார்கள் என்பதால் அவங்களால் இப்போதைக்கு வர முடியாது.
தவிர, பேத்திக்கு வரும் செப்டம்பரில் தேர்வு இருப்பதால், அவள் மும்பரமாக தற்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறார்.
அவளுக்கு கடவுள் பக்தி அதிகம், சிறையில் இருக்கும் போது கூட, விரதம், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களை சரியாக கடைபிடிப்பாள்.
அதுமட்டுமின்றி அவளுக்கு சமையல் நன்றாக வரும், சிறையில் இருந்து வந்து இரண்டு நாட்கள் தான் அவளுக்கு நான் சமைத்து கொடுத்தேன், இப்போது அவள் என்னை அமர வைத்து நீங்கள் உட்காருங்கம்மா, நான் பார்த்துக்கிறேன் என்று வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து வருகிறார்.
அவளால் நிம்மதியாக ஒரு கடைத்தெருவுக்கு கூட தனியாக போக முடியவில்லை, அதுமட்டும் தான் கஷ்டமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை, நானும் என் பொண்ணும் சேர்ந்திருக்கிற மாதிரி, என் பொண்ணு அவ பொண்ணோட சேரணும்.
தன் குழந்தையோட இரண்டு வயசு வரைக்கும்தான் கூட இருந்தா. அதுக்கப்புறம் தன் மகள் இப்போது லண்டனில் இருக்கும் மகள் ஹரித்ராவை பிரிஞ்சேதான் இருக்கிறா. ஒரு அம்மாவாக அவள் பாவம் என்று கூறி முடித்தார்.