கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அன்று முதல் பொதுமக்கள் பழைய நோட்டுகளால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது பழைய 500 ரூபாய் நோட்டு ஒரு சிறுமியின் கற்பையே சூறையாடி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பதாம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பசு மாட்டின் வரட்டிகளை விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கடந்த திங்கட்கிழமை அதே ஊரை சேர்ந்த 3 பேர் வந்து வரட்டி வாங்கி கொண்டு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதை அந்த விவசாயி வாங்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அவர்கள் வரட்டி விற்கும் வியாபாரியை பழிவாங்க திட்டமிட்டனர். சம்பவத்தன்று விவசாயி தனது மனைவியுடன் வெளியில் சென்று விட்டார். வீட்டில் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்தாள்.
இதனை நோட்டமிட்ட அந்த 3 பேர் கும்பல் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்றனர். பின்னர் அருகில் உள்ள வயல் வெளியில் வைத்து சிறுமியை 3 பேரும் பலாத்காரம் செய்தனர். இதில் ஒருவர் 9ம் வகுப்பு மாணவன் ஆவார்.
வீடு திரும்பிய பெற்றோருக்கு மகள் பலாத்காரம் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். ஒருவரை போலீசார் கைது செய்தனர். மாணவன் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.