Loading...
மலேசியாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றபோது காணாமற் போன 15 வயது சிறுமியை தேடும் நடவடிக்கையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தேவைகளைக் கொண்ட நோரா குய்ரின், இந்தமாதம் 4 ஆம் திகதி விடுதியிலுள்ள தனது அறையிலிருந்து காணாமல் போயிருந்தார்.
நோரா காணாமல் போன இடத்திற்கு அருகே இன்று மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்த சடலம் நோராவினுடையது என அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Loading...
நாளையதினம் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நோராவைத் தேடும் பணிகளில் சுமார் 350 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு நோரா காணாமல் போன இடத்திலிருந்து ஒருமைல் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...