Loading...
வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாக இருந்த ஆறு மாதங்களில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இன்று அவருடைய தாயார் தங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஊடகங்கள் கூறுவது போல் மதனுக்கு 3 மனைவிகள், பல காதலிகள் என்பது அப்பட்டமான பொய் என்றும், முதல் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாகவும், இவர்களை தவிர மதனுக்கு வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பு கிடையாது என்றும் கூறினார்.
Loading...
மேலும் உயிர் மீது உள்ள பயத்தின் காரணமாகவே மதன் தலைமறைவானதாகவும், எஸ்.ஆர்.எம். நிர்வாக பிரச்சனையில் மதனை பலிகடா ஆக்க ஒருசிலர் முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Loading...