இந்தியாவின் கோவா மாநிலத்தில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவா மாநிலத்தின் வாஸ்கோ பகுதியில் நடைபெற்ற Saptah விழா சந்தையில் இருந்து மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 11 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த சந்தையில் பலூன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளான் குறித்த 11 வயது சிறுவன். சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பில் பெற்றோரின் புகாரை அடுத்து பொலிசார் அப்பகுதியில் உள்ள 120 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர்.
இதனிடையே இரு சிறுவர்களும் ஒன்றாக விளையாடுவதை அப்பகுதியில் உள்ள பலரும் பார்த்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து சிறுவனை அழைத்து பொலிசார் விசாரித்துள்ளனர். ஆனால் முதலில் சிறுவன் மறுத்துள்ளான்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சிறுவன் நடந்தவற்றை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளான்.
அதில், மரணமடைந்த சிறுவனுக்கு இலவசமாக பலூன் தந்து அவனுடன் நட்பை ஏற்படுத்தியதாகவும்,
பின்னர் இருவரும் அருகாமையில் உள்ள கொஸாம்பி கட்டிடத்தின் மேலே சென்று விளையாடியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
இந்த நிலையில், மரணமடைந்த சிறுவனை பாலியல் ரீதியாக நெருங்கியதாக கூறும் சிறுவன், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து, படிக்கட்டு வழியாக வெளியேற முயன்றுள்ளான்.
ஆனால் அந்த சிறுவனை வெளியேற விடாமல், மீண்டும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளான்.
இதில் பயந்து போன அந்த 7 வயது சிறுவன், மேலிருந்து கழிவறை குழாய் வழியாக நிர்வாணமாக கீழிறங்கியுள்ளான்.
ஆனால் கைதவறி மேல் இருந்து கீழே விழுந்துள்ளான். இதை பார்த்து நின்ற அந்த 11 வயது சிறுவன் அச்சத்தில், உடைகளை ஒரு தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
உடை ஏதுமின்றி சிறுவனின் சடலத்தை மீட்ட பொலிசார், அந்த கட்டிடத்தின் மேலே இருந்து சிறுவனின் ஆடைகளை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 11 வயது சிறுவனை சிறார் நீதிமன்றம் முன்பு சிறுவனை ஒப்படைத்த பின்னர், தற்போது சிறார் இல்லத்தில் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த திங்களன்று நடந்த இந்த விவகாரம், கோவா மாநிலத்தின் வாஸ்கோ பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.