தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திராவிடர் கழக அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்யப்பட்டதாக பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழக அரசியலை தூய்மைப்படுத்தும் தருணம் வந்துவிட்டது.
பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இந்து எதிர்ப்பாளர்களுக்கு நிதி உதவி செய்யும் வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தின் அறக்கட்டளையை பாஜக கையகப்படுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Time to clean up politics in TN. BJP should start by seizing Dravida Kazhagam Black Shirted Veeramani alias Vaira(Tamil for diamond) Money Trust which has been financing extremists such as Elis ( LTTE)and Hindu haters.
— Subramanian Swamy (@Swamy39) August 20, 2019