தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கனடாவில் அடுத்தடுத்து காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராம்ப்டன் பகுதியில் ஒருவார இடைவெளியில் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பரிந்தர் கவுர் (34) என்ற பெண் பிராமலியா வீதி பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒரு தெற்காசியர் என்றும் பழுப்பு நிறக் கண்களும், நீண்ட கருமையான கூந்தலையும் கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லவ்லீன் தவான் (27) என்ற இளம்பெண்ணும் கடந்த 14ம் திகதி மதியம் 1 மணியளவில் மக்லாஹ்லின் (McLaughlin Road South and Steeles Avenue West) வீதி பகுதியில் காணாமல் போயுள்ளார்.
மெலிவான உடல்வாகும், 5 அடி 7 அங்குலம் உயரமும், தோள்பட்டை வரை நீண்ட கருமையான தலைமுடியும் கொண்டவர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லவ்லீனுக்கு சொந்தமான கார் திறப்புக்களை கண்டெடுத்த மலையேற்றத்திற்கு சென்ற இரண்டு இளம்பெண்கள் அவற்றை அங்கிருந்த சிலரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
காணாமல் போன இரண்டு பெண்களுமே தெற்காசியாவை சேர்ந்தவர்கள்.
இரண்டு இளம்பெண்களையும் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கனேடிய பொலிசார் நாடியுள்ளனர்.