தற்போதைய அரசாங்கம் அதிக இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில்உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் வாகனத்திற்கு தேவையான மின்சக்தி வழங்கும் மீள்நிரப்புநிலையங்களை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த ஒரு திட்டத்தையும்முன்வைக்கவில்லை என உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றுச் சூழலை பாதுகாத்தல் என்ற பெயரில் அரசாங்கம் அதிக வரிகளை திணிக்கின்றதுஎன நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சூழலை பாதுகாப்பதற்காக,2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய கார்பன் வெளியேற்ற வரியின் உள்நோக்கம்அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மற்றமொரு முயற்சி என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.